Latestமலேசியா

நஜிப்பின் வீடுகளில் இருந்து பெட்டி பெட்டியாக நகை, பணம்!

கோலாலம்பூர், மே.18- மொத்தம் 72 பெட்டிகளில் ரொக்கம் மற்றும் நகைகள், ஆபரணங்களுடன்,  284 பெட்டிகளில் விலைமதிப்பு மிக்க ஹேண்ட் பேக்குகள் என வியக்கத்தக்க வகையிலான  பொருள்களை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு தொடர்புடைய இடங்களில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாள்களாக   ஜாலான் டுத்தா இல்லம் உள்பட நஜிப்பிற்கு தொடர்பு 6 இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1எம்டிபி நிறுவன நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒருபகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பேரங்காடிகளில் இருக்கும் தள்ளுவண்டியைப் போன்ற டிரோலிகளில் பொருள் நிரப்பப்பட்டு ஐந்து போலீஸ் டிரக்குகளில் அதிகாலை 2.15க்கு ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.

இந்தப் பொருள்களின் மொத்த மதிப்பு குறித்து புக்கிட் அமான் வர்த்தகக்  குற்றவியல் பிரிவின்  இயக்குனர் டத்தோ அமார் சிங்கிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்ட போது இது பற்றிய  கணக்கெடுப்பை போலீசார்  மேற்கொண்டு வருவதால் ஒரு மதிப்பீட்டை தம்மால் வழங்க முடியவில்லை என்று சொன்னார்.

நஜிப்பின் வீட்டில்  20 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்ததாக கூறப்படும் ஓர் இரும்புப் பேட்டிக்கு சாவியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் வெளியிலிருந்து சாவி தயாரிக்கும் ஆள் வரவழைக்கப்பட்டார். அது திறக்கப்பட்ட போது அதனுள் பல அம்சங்கள் இருந்ததாகவும் எனினும், அது பற்றி விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker