Latestஇந்தியா

ஆதரவு இல்லை: வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா ராஜினாமா!

பெங்களூரு, மே 19- சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத நிலையில் வாக்கெடுப்பு
முன்பாகவே முதலமைச்சர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக திட்டமிட்டது.

ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. அதன் படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. காலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். 195 எம்எல்ஏக்கள் பதவியேற்ற
பின் சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது,

இதற்கிடையே பாஜகவின் இறுதிகட்ட குதிரை பேரம் குறித்து சர்ச்சை கிளப்பிய காங்கிரஸ், எடியூரப்பா சம்பந்தப்பட்ட ஆடியோவை வெளியிட்டது. காங்கிரஸ் எம்எல்ஏ பாட்டீலை தொடர்பு கொள்ளும் எடியூரப்பா அவரிடம் அமைச்சர் பதவி தருவதாக பேசுகிறார்.

காங்கிரசின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அக்கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் காலை அமர்வில் பங்கேற்றவில்லை. அவர்களை பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது பிடியில் வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இது போன்ற சூழ்நிலையில் வாக்கெடுப்பின் போது அணி மாறி வாக்களிப்பார்கள் என்ற சந்தேகம் பாஜக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை என்பது தெரிய வந்ததும் உடனே ராஜினாமா செய்யும்படி எடியூரப்பாவுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

எனவே, வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் எடியூரப்பா
ராஜினாமாவை உறுதிபடுத்தும் விதமாக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா 13 பக்கங்கள் கொண்ட உணர்ச்சிமிகு உரையை
தயார் செய்தார்.

பிற்பகல் 3.30 மணிக்கு சட்டமன்றம் மீண்டும் கூடியபோது மீதமுள்ள எம்ஏக்கள் பதவியேற்றனர். தனது உரைக்கு பின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker