Latestஉலகம்

இளவரசர் ஹர்ரி திருமண விழா ஆரம்பம்: யாரையும் தொடாதே! – புது இளவரசி விதி!

லண்டன், மே. 19- இங்கிலாந்து இளவரசர் ஹர்ரி – மேகன் திருமணம் இன்று வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. இதற்காக அரண்மனை விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகத் தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்றுள்ளனர் என்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசரும் டயானாவின் மகனுமான ஹர்ரி , அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான மேகன் மெர்க்கலை மணக்கவிருக்கிறார்.
இத்திருமணத்திற்குப் பின் இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் புதிய உறுப்பினராக இணையும் மேகன் சில விஷயங்களை இனி பின்பற்ற வேண்டும். அரச குடும்பத்தினருக்கான கட்டுப்பாடுகள் அவை:

## அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அணியும் ஆடைகளில் எந்த வாசகமும் இருக்கக்கூடாது. கருத்துகளை சொல்லும் ஆடைகளையோ வாசகம் பொறித்த ஆடைகளையோ அணிதல் கூடாது. நாகரிகமான முறையில் உடை அணிய வேண்டும்.

## விலங்கின் உரோமங்களால் உருவாக்கப்பட்ட எந்த உடையையும் அணியக்கூடாது இது 12 ஆவது நூற்றாண்டின் மன்னர் 3 ஆவது எட்வார்ட் பிறப்பித்த உத்தரவாகும்.

## பொது இடங்களில் காதலில் கட்டுண்டு இருப்பதை போன்றோ- காதலை வெளிப்படுத்தவோ கூடாது.

## அரச குடும்பத்தை சேராதவர்களை அரச குடும்பத்தினர் தொடக்கூடாது. ஒரு வேளை திருமணத்திற்கு பின் மேகன் தனது தாய் தந்தையைக் கட்டிப் பிடிக்க விரும்பினால் அது முடியாது. ஏனெனில் மெர்க்கல் இளவரசியாக வேண்டுமானால் அதற்குரிய விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும்,

## அரச குடும்பத்தினர் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒன்றாகத் தான் கொண்டாட வேண்டும்

## பாதுகாப்பு காரணங்களைக் கருதி அரச குடும்பத்தினர் ஒன்றாக எங்கும் பயணம் செய்யக்கூடாது, அதே சமயம் நீண்ட பயணங்களும் மேற்கொள்ளக் கூடாது,

## அரச குடும்பத்தினர் எந்த காரணத்துக்காகவும் வாக்களிக்கக்கூடாது.
வாக்குகள் தவறாக பிரசாரம் செய்யப்படக்கூடாது என்பதே விதி.

## அரசியலில் ஈடுபடக்கூடாது. அரசுப் பதவிகளில் வகிக்க கூடாது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி பதவிகளை பெற்று துஷ்பிரயோகம் செய்யலாம் என மக்கள் கருதலாம்.

## மேகன் தனது விரல் நகங்களுக்கு அடர்நிற நக பாலிஸ் போடக் கூடாது. அது ஆபாசம் என கருதப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker