Latestமலேசியா

நகைக்கடை கொள்ளை: போலீஸ் அதிரடி! மூவர் பலி!

பெட்டாலிங் ஜெயா,மே.19- டாமான்சாராவில் உள்ள அட்ரியாப் பேரங்காடியின் நகைக்கடை ஒன்றில் சம்பந்தப்பட்ட  3 கொள்ளையர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு சந்தேக நபர் காயமடைந்தார்.

நேற்று மாலை 5 மணி அளவில் நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டில் இதர மூன்று சந்தேக நபர்கள் டி-9 எனப்படும் குற்றவியல் விசாரணை குழுவினரால் கைதுசெய்யப்பட்டனர். ஆறு பேரைக் கொண்ட அந்தக் கும்பல் பேரங்காடியில் உள்ள நகைக்கடையைக் கொள்ளையடித்தது. அவர்கள் தங்கள் முகத்தை மறைக்கத் தலைக்கவசம் அணிந்திருந்ததோடு இரும்பு சுத்தியலையும் துப்பாக்கியையும் ஆயுதமாக வைத்திருந்தனர்.

சந்தேக நபர்களில் ஒருவன் நகைக்கடை பாதுகாவலனிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய பின்னர் கடையினுள் புகுந்தான். அவனைத் தொடந்து மற்ற ஐந்து சந்தேக நபர்களும் நகைக்கடை நுழைந்த பின்னர், அவர்கள் இரும்புச் சுத்தியலை கொண்டு கண்ணாடிப் பேழைகளை உடைத்து தங்க நகைகளை பேக்கில் போட்டுக் கொண்டுத் தப்பித்துச் சென்றனர் என மூத்த உதவி ஆணையாளர் பாட்சில் அகமட் தெரிவித்தார்.

அதே வேளையில், பேரங்காடியை நோக்கி வந்துக் கொண்டிருந்த போலீசார், மூன்று மோட்டார் சைக்கிள்களில் தப்பியோட முயன்ற அந்த சந்தேக நபர்களை தற்செயலாகச் சந்தித்த பின்னர் அவர்களை துரத்த ஆரம்பித்தனர். அதன் பின்னர் போலீசாருக்கும் அவர்களுக்கும் நடந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்கள் மரணமடைந்தனர்.

மேலும், இதர மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் மற்றொருவன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தான் என பாட்சில் அகமட் கூறினார்.

இதனிடையே இந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஆசாமி இன்று அதி காலை 1 மணியளவில் புக்கிட் பெருந்தோங்கில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker