Latestமலேசியா

‘மந்திரி புசார் பதவியை கைவிடத் தயார்!’ -அஸ்மின் அலி

கோலாலம்பூர், மே. 19- பொருளாதார விவகார அமைச்சராக தாம் நியமிக்கப் பட்டிருக்கும் நிலையில், கூட்டரசு அரசாங்கத்திற்கு உதவ, தாம் தேவைப்படும் நிலை இருக்குமானால் சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை கைவிடத் தாம் தயாராக இருப்பதாக டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

”நான் இன்னமும் சிலாங்கூர் மந்திரி புசார்தான். மத்திய அரசுக்கு தாம் உதவ வேண்டிய அவசியம் இருக்கும் பட்சத்தில் மந்திரி புசார் பதவியை விட்டு விடுவேன்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து சிலாங்கூர் சுல்தானைச் சந்திப்பதற்காக தாம் காத்திருப்பதாக குறிப்பிட்ட அஸ்மின் அலி, இது மந்திரி புசார் பொறுப்பு சம்பந்தப்பட்ட அம்சமாக இருப்பதால் இதனை சிலாங்கூர் சுல்தானின் கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் மக்கள் வழங்கிய ஆட்சி அதிகாரம் மிகப்பெரியது. எனவே இப்பிரச்ச்னையை முறையான வகையில் கையாள வேண்டியுள்ளது என்று அஸ்மின் அலி செ தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker