Latestஉலகம்

அந்த இருக்கை யாருக்கு? இளவரசி டயானாவுக்கு!

லண்டன். மே.,20- பிரிட்டன் இளவரசர் ஹர்ரியின் திருமணத்தில் இளவரசி டயானாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட்டிருந்தது பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இளவரசர் ஹர்ரி தனது தாய் டயானா மீது அதிக பாசம் வைத்திருந்தார். நிச்சயதார்த்தத்தின் போது தனது தாயின் மோதிரத்தில் இருந்து இரண்டு கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மோதிரத்தை மெர்க்கலுக்கு அணிவித்தார்.

மேலும் , தனது திருமணத்தில் டயானாவின் உறவினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது சகோதரிகளுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் நேற்றைய திருமணத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வாக திருமணம் நடைபெற்ற தேவாலயத்தில் ஓர் இருக்கை காலியாகிருந்தது.

இளவரசர் வில்லியம்சுக்கு அருகில் இருந்த அந்த இருக்கை இளவரசி டயானாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பாராட்டுக்களைப் பெற்ரு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker