Latestமலேசியா

அமைச்சராக விருப்பம் இல்லை! -லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், மே.20- புதிய அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இடம் பெறத் தாம் விரும்பவில்லை என்று ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்தார். இந்தப் புதிய அமைச்சரவையில் போதுமான இளம் திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

அமைச்சர் பதவி எதிலும் இல்லாவிட்டாலும் சிறந்த மலேசியாவை உருவாக்கும் சீர்திருத்தப் பணிகளைக் கொண்டுவரத் தாம் தொடர்ந்து பாடுபடப் போவதாக இஷ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் சொன்னார்.

நடப்பு அமைச்சரவையில் ஜசெகவைச் சேர்ந்த நால்வர் அமைச்சர்களாக உள்ளனர். நிதியமைச்ச்சராக லிம் குவான் எங், போக்குவரத்து அமைச்சராக அந்தோனி லோக், மலேசிய தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் மற்றும் மனித வளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் ஆகியோர் புது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker