Latestமலேசியா

அல்தான் துயா கொலை; உண்மையை அம்பலமாக்கத் தயார் -சிருள்

கோலாலம்பூர், மே.20- மலேசியாவுக்கு திரும்புவதற்கு தமக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட்டால், மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா கொலை விவகாரத்தில் என்ன நடந்தது? என்பதைத் தாம் முழுமையாக அம்பலப்படுத்தத் தயாராக இருப்பதாக முன்னாள் போலீஸ் அதிகாரி சிருள் அஷார் உமார் தெரிவித்துள்ளார்.

அல்தான் துயாவை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளில் சிருள் அஷாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு தாம் உதவத் தயாராக இருப்பதாக அவர், ‘மலேசியக் கினி’ இணையச் செய்திக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் என்னை பலர் ஓர் அரசியல் கைதியாகத்தான் பார்க்கிறார்கள். இதுதான் என் மீதான ஒரே குற்ற வழக்கு. இதற்கு முன்னர் எத்தகைய குற்றத்தையும் நான் செயந்ததில்லை. எனக்கு வேறு குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றார் சிருள் அஷார்.

அல்தான் துயா வழக்கு நடத்தப்பட்ட முறையில் தாம் அதிருப்தியாயாக இருப்பதாக குறிப்பிட்ட சிருள் அஷார், வழக்கின் போது எனக்கு வழக்கறிஞர் சொன்னதை மட்டுமே செய்தேன் என்று தெரிவித்தார்.

அல்தான்துயா வழக்கில் மறுவிசாரணை நடத்தப்படவேண்டும் என்று அன்வார் இப்ராகிம் கோரிக்கை விடுத்திருப்பதை தாம் வரவேற்பதாக கூறிய அவர், வழக்கின் போது மிக முக்கிய சாட்சி ஒருவர் கடைசி வரை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படவேயில்லை என்று சொன்னார்.

இந்த வழக்கில் சிருள் அஷாருக்கும் மற்றொரு போலீஸ்காரரான அஷிலா ஹட்ரி என்பவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் சிருள் அஷார் தப்பித்து ஆஸ்திரேலியாவுக்கு ஓடிவிட்டார். அங்கு குடிநுழைவுச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker