Latestமலேசியா

இப்போதே ஜிஎஸ்டி சலுகைகள்! வர்த்தக நிறுவனங்கள் தீவிரம்!

கோலாலம்பூர், மே. 20- சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி வரி ஜூன் மாதத்தில் தான் அகற்றப்படுகிறது என்ற போதிலும் பல வர்த்தகர்கள் இப்போதே தங்களின் விற்பனையையும் வர்த்தகக்த்தையும் பெருக்குவதற்கு 6 விழுக்காடு சலுகை விலை விற்பனை விளம்பரங்களைச் செய்யத் தொடங்கி விட்டனர்.

தாங்கள் விற்கும் அத்தனை பொருள்களுக்கும் 6 விழுக்காடு விற்பனைச் சலுகை என்று சில வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். சிலர் குறைந்த பட்சம் இவ்வளவு தொகைக்கு பொருள்கள் வாங்கினால் 6 விழுக்காடு விலைச் சலுகை என்று அறிவித்துள்ளானர்.

ஜூன் மாதத்தில் தான் ஜிஎஸ்டி அகற்றப்படுகிறது என்றாலும் இப்போதே அத்தகைய 6 விழுக்காடு சலுகையை பலதொழில் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் வர்த்தக மையம் 150 ரிங்கிட்டிற்கு மேல் பொருள் வாங்கினால் 6 விழுக்காடு விலைச் சலுகை அளிக்கிறது. அதேபோன்று ஹபிப் நகைகடையும் இது போன்ற சலுகை அளிக்க முன்வந்துள்ளது.

பிரபல கேக் நிறுவனமான அமோஸ் மலேசியாவும் தங்கள் வாடிக்கையாளர்கள் ஜூன் முதல் தேதிவரை காத்திருக்க வேண்டியதில்லை , இப்போதே 6 விழுக்காடு ஜிஎஸ்டி இல்லாலாமல் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி அமலுக்கு இன்னும் வரவில்லை எனினும் தங்களின் வர்த்தகத்தின் அளவு கூடியிருக்கிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வரும் வரையில் மக்கள் பொருள் வாங்குவதை சற்று நிறுத்தி வைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறு இல்லாமல் மக்கள் தொடர்ந்து கூடுதலான ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கி விட்டனர் என்று பிரபல பேரங்காடியான மைடின் தெரிவித்தது.

மளிகை வியாரிகள் சங்கமும் ஜிஎஸ்டி அகற்றப்படுவதால் கூடுதலான வியாபாரம் நடக்கும் என்று தனது உறுப்பினர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தது. எனினும் ஏற்கெனவே கைவசம் உள்ள பொருள்களுக்கு ஜிஎஸ்டியை செலுத்தியுள்ள நிலையில், அதற்கான சுமையையும் சங்க உறுப்பினர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது என்று சங்கம் கூறியது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker