Latestமலேசியா

‘உயிருக்கு மிரட்டலா? பாதுகாப்பு கேட்டேனா?’ -நஜிப் மறுப்பு!

கோலாலம்பூர், மே. 20- 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தமக்கும் தம்முடைய குடும்பத்திற்கும் மிரட்டல் ஏற்பட்டிருப்பதால் சாட்சிகள் என்ற அடிப்படையில் முழு பாதுகாப்பைக் கோரி தாம் போலீசில் புகார் செய்திருப்பதாக கூறப்படுவதை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் மறுத்துள்ளார்.

தாம் போலிஸ் பாதுகாப்பை நாடியிருப்பதாக வெளிவந்த தகவல் குறித்து பெக்கானில் உள்ள அவரது இல்லத்தில் நஜிப்பிடம் நிருபர் கேட்ட போது அதனை அவர் மறுத்தார்.

தமக்கும் தமது குடும்பத்தினரின் உயிருக்கும் மிரட்டல் ஏற்பட்டிருப்பதால் சாட்சிகளுக்குரிய பாதுகாப்பு அடிப்படையில் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி அவர் போலீஸில் புகார் அளித்திருப்பதாக உள்ளூர் இணைய ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. எனினும் அத்தகைய பாதுகாப்பு எதனையும் தாம் கோரவில்லை என்று நஜிப் மறுத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker