Latestஉலகம்

டோல் கட்டணம்: நிர்வாகத்தை அரசு ஏற்க கோரிக்கை

கோலாலம்பூர், மே..20- கொள்ளை லாபத்தை தடுக்கவும் மக்கள் பயனடையும் நோக்கிலும் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் டோல் கட்டண நிறுவனங்களின் குழும நிர்வாக கட்டமைப்பை, பக்காத்தான் அரசாங்கம் அப்படியே வாங்க முன்வர வேண்டும் என்று சுபாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அடுத்த தொடக்கத்திற்குள் டோல் கட்டணம் மீதான கட்டண மறு ஆய்வை அரசு அறிவிக்கவேண்டும். இது மக்களின் சுமையை உடனடியாகக் குறைக்க உதவும் என்றார் அவர்.

மேலும் தனது நிதி நிலைமையை முற்றாக வலுப்படுத்திக் கொண்ட பின்னர் அதாவது அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் டோல் கட்டண நிறுவன நிர்வாகத்தை அரசு ஏற்கவேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.

அதே போன்று அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பையும் அரசாங்கம் எடுத்துக் கொள்ள முன்வரவேண்டும். அந்நிறுவனங்கள் பெறும் வருமானம் மீண்டும் கூட்டரசு அரசாங்கத்திற்கே வந்து சேர்வதற்கு, இதன் மூலம் வழி ஏற்படுத்தினால் தேசிய கடன் நிலையை குறையும் என்றும் வோங் சென் சொன்னார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker