Latestமலேசியா

1எம்டிபி முறைகேடு; விசாரணைக் குழு பணிகள் ஆய்வு ! -அபு தாலிப்

கோலாலம்பூர், மே. 20- புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1எம்டிபி தொடர்பான விசாரணைக் குழு, தனது பணிகள் குறித்த விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்து வருகிறது என அக்குழுவின் தலைவரான டான்ஶ்ரீ அபு தாலிப் தெரிவித்தார்.

இந்த விசாரணைக் குழுவின் நிலமை குறித்து விளக்குவதற்கு முன் இக்குழு கடந்த வெள்ளிக்கிழமைதான் அமைக்கப்பட்டது என்பதால் இப்போதைக்கு கருத்துச் சொல்ல முடியாது. சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

1எம்டிபி விவகாரத்தில் விசாரணை நடத்தி, அறிக்கை ஒன்றை இக்குழு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் குழுவின் தலைவரான துன் டாய்ன் கூறியிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker