Latestஇந்தியா

ஆபாசம்: வாட்ஸ்ஆப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அபராதம்!

ஹைதராபாத். மே.21- ஆபாசப் படங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்காத வாட்ஸ் அப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரஜ்வாலா என்ற தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பிரபல இணையத் தளங்களில் ஆபாசப் படங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி உச்சமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பாலியல் வன்முறையைத் தூண்டும் ஆபாசப் படங்களும் குழந்தைகளின் ஆபாசப் படங்களும் பரவுவதைக் தடுக்க நடவடிக்கை எடுக்காத வாட்ஸ் அப், பேஸ்புக், கூகுள், மைக்ரோ சாப்ட், யாஹூ, உள்ளிட்ட இணையத்தள நிறுவனங்களை உச்ச நீதி மன்றம் கண்டித்துள்ளது.

மேலும், இந்த நிறுவனங்கள் ஆபாசப் படங்களைத் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கை பற்றி ஜூன் 15 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker