Latestமலேசியா

இன்று நஜிப்பிடம் எம்ஏசிசி விசாரணை: என்ன நடக்கப் போகிறது?

கோலாலம்பூர், மே.21- 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் நாளை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு நேரில் வர வேண்டும் என்று அந்த ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ அஸாம் பாகி கூறினார்.

நஜிப் அங்கு வரத் தவறினால் 2009-ஆம் ஆண்டின் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அஸாம் பாகி தெரிவித்தார். அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் என்று தகவலக்ள் கூறுகின்றன.

எஸ்.ஆர்.சி தொடர்பில், நஜிப்பிடன் விசாரணை செய்யவிருப்பதாகவும், அது தொடர்பில் நாளை அவர் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வர வேண்டும் என்று தாம் அந்த முன்னாள் பிரதமருக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவ்விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு நஜிப் மட்டும் தான் அழைக்கப் பட்டிருக்கிறார். வேறு யாரும் இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை.
1எம்டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமாக எஸ்.ஆர். செயல்பட்டது. அதன் பின்னர், கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கி, அந்நிறுவனம், நிதி அமைச்சின் கீழ் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker