Latestமலேசியா

‘எங்கள் நண்பர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?’ – ரோஸ்மா

கோலாலம்பூர், மே 21 – முன்னாள் நண்பர்கள் என்ன ஆனார்கள்? பொதுத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் தம்மையும் தம்முடைய கணவரையும் ஒதுக்கி விட்ட அந்த முன்னாள் நண்பர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை என்கிறார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர்.

அரசியலில் இதெல்லாம் சகஜம். நாம் நல்ல நிலையில் இருந்தால் எல்லோரும் போற்றுவார்கள். நமக்கு பிரச்னை என்று வந்து விட்டால், அவர்கள் காணாமல் போய் விடுவார்கள். இதெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்கிறார் ரோஸ்மா.

தங்களின் வீடுகளில் தொடர்ச்சியாக போலீசார் சோதனைகளை மேற்கொண்ட போதிலும் ரோஸ்மா மனம் தளராமல்தான் இருக்கிறார் என்பது அவர் மலாய் மெய்ல் நாளிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து தெரிய வருகிறது.

”இப்போது என் கவனம் எல்லாம் என்னையும் என் பிள்ளைகளையும் பாதுகாப்பதில் தான் இருக்கிறது. என் குடும்பம் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் விடிவு பிறந்து விடும்” என்று அவர் கூறினார்.

இந்தப் பேட்டியின் போது, ரோஸ்மாவின் உதவியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் டத்தோ கீதன்ராம் வின்செண்ட் மற்றும் புரவலன் ஆகியோர் உடனிருந்தனர்.

”அரசியலில் இத்தகைய விசாரணைகள், அமளிகள் தொல்லைகள் வரும். அது போன்ற சூழல்தான் இது. இதனைச் சமாளிக்கக் கற்று வருகிறோம். அதே வேளையில் இப்போது உள்ள சூழல் குறித்து எனக்கு வருத்தமில்லை. மிகவும் ஓய்வான நிலை உருவாகி வருகிறது. நான் நினைத்த நேரத்தில் தூங்கவும் நினைத்த நேரத்தில் எழுந்திருக்கவும் இந்த வாழ்க்கை எதுவாக உள்ளது” என்று ரோஸ்மா குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker