Latestமலேசியா

காலிட் – அபெண்டி துரோகிகள்!- –கைரூடின் ஆவேசம்

கோலாலம்பூர், மே.21- 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான தனது புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்த முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ காலிட் அபு பக்கார் மற்றும் சட்டத்துறைத் தலைவர் டான்ஶ்ரீ அபெண்டி அலி ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டத்தோஶ்ரீ கைரூடின் அபு ஹசான் கேட்டுக் கொண்டுள்ளார்.

1எம்டிபி விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு அதிகாரிகளிடம் புகார் செய்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு கேடு விளைவித்துள்ளார் என்றுகடந்த 2015-ஆம் ஆண்டு, கைரூடின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால், தனது புகாரை நிராகரித்த காலிட் மற்றும் அபெண்டி ஆகிய இருவரும், மலேசிய மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்து விட்டனர் என்று கைரூடின் கூறினார்.

“நாட்டின் பொருளாதாரத்திற்கு நான் தீங்கு விளைவித்ததாக காலிட் எம்மீது குற்றஞ்சாட்டினார். ஆனால், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் மற்றும் ஜோ லோ மக்களின் நிதியை கொள்ளையடித்து விடக் கூடாது என்ற அக்கறையில் தான் நான் வெளிநாட்டு அதிகாரிகளிடம் 1எம்டிபி குறித்து புகார் செய்தேன்” என்று அவர் சொன்னார்.

இதனிடையில், நஜிப்பின் வங்கிக் கணக்கிலிருந்து, அமெரிக்க டாலர் 700 மில்லியனிலிருந்து சிறு தொகையை சிங்கப்பூருக்கு பண பரிமாற்றம் செய்ய அனுமதி வழங்கியுள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலார்ந்து வங்கியின் மீது தாம் அண்மையில் போலீஸ் புகார் ஒன்றை தொடுத்துள்ளதாக கைய்ரூடின் கூறினார்.

அதுமட்டுமல்லாது, 1எம்டிபி நிதி முறைக்கேடு தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க உளவுத் துறையிடம், கைரூடின் அண்மையில் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker