Latestமலேசியா

நஜிப் வீட்டு: நகைகளா? குழப்பத்தில் கும்மியடிக்கும் வலைத்தளங்கள்!

கோலாலம்பூர், மே 21 – சமூக ஊடகங்களில் வலைத்தளவாசிகள் சந்தடி சாக்கில், குழப்பத்தில் புகுந்து கும்மியடித்து விட்டுப் போகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சில வேளைகளில் உண்மையாகி விடுகிறது.

அந்த வகையில் முன்னாள் பிரதமர் நஜிப்பின் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக கூறி ஏராளமான நகைக் குவியல்கள், ஆடம்பர ஹேண்ட் பேக்குகள், விலையுயர்ந்த கடிகாரக் குவியல்கள் கட்டுக்கட்டாக ரொக்கம் என்று சமூக ஊடகங்களில் பரவலாகி வரும் படங்களும், காணொளிகளூம் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் கைத்தொலைபேசி செயலிகளிலும் இந்தப் படங்கள் பரவி வருகின்றன.

நஜிப்பின் வீட்டில் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில் இருந்து இவையெல்லாம் மீட்கப்பட்டுள்ளன என்று பொய்யான தகவல்கள் பரபரப்பி விடப்பட்டுள்ளன.

இந்தப் படங்கள் பெரும்பாலும் இணையத்தளங்களில் இருந்து இஷ்டத்திற்கு பொறுக்கி எடுத்து, இட்டுக்கட்டி வெளியிடப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது.
மேலும் இவ்வாறு பரவி வரும் படங்களில் சிலவற்றை சில இணையச் செய்தித் தளங்களும், முறையாக சரிபார்க்காமல் வெளியிட்டுள்ளன.

இந்த விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள் அனைத்தும் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மாவுக்கு சொந்தமானவை என்றும் அந்தத் தளங்கள் விளக்கம் அளித்துள்ளன.

ஆனால், இந்தப் படங்களுக்கும் நஜிப்பின் வீடுகளில் நடத்தப்பட்ட 1எம்டிபி போலீஸ் சோதனை நடவடிக்கைகள் மற்றும் கைப்பற்றப் பொருள்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker