Latestமலேசியா

பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது

ஜோர்ஜ் டவூன், மே.21- இங்கு ஜாலான் பினாங்கு என்ற பகுதியில் உள்ள உணவகத்தின் முன்புறம், பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரை தாக்கிய கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் இருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அச்சம்பவம் தொடர்பில், 38 வயது ஆடவர் ஒருவரை இரு நாட்களுக்கு முன்னர், போலீசார் கைது செய்தனர். அந்தச் சுற்றுலாப் பயணியை கழுத்துப் பகுதியில் தாக்கிய கும்பலைச் சேர்ந்த 30 வயது ஆடவன் ஒருவனை போலீசார் நேற்று கைது செய்தனர் என்று வடக்கு கிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் ஒமார் கூறினார்.

“இதுவரை நாங்கள் இருவரை கைது செய்துள்ளோம். மேலும் சிலரை தேடி வருகின்றோம். அதுமட்டுமல்லாது, சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் நண்பர்கள் இருவரையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்” என்று அவர் சொன்னார்.

அதிகாலை 4.10 மணிக்கு, கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்று, அந்த பிரிட்டன் நாட்டவரை, அக்கும்பல் தாக்கியது. அச்சம்பவத்தில், அந்த சுற்றுலாப் பயணி கடுமையான காயங்களுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அந்த 38 வயது ஆடவனை போலீசார் கைது செய்தனர். அவன் வியாழக்கிழமை வரை போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker