Latestமலேசியா

புது மந்திரிபுசார் வரும் வரை அஸ்மின் பதவியில் இருப்பார்!

கோலாலம்பூர், மே 21 – சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பொருத்தமானவர் ஒருவரைத் தேர்வு செய்து, அவருக்கு சிலாங்கூர் சுல்தான் ஒப்புதல் அளிக்கும் வரையில், டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தொடர்ந்து சிலாங்கூர் மந்திரி புசார் பதிவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மந்திரி புசாராக இருந்துவரும் நிலையில் அஸ்மின் அலி கூட்டரசு அரசாங்கத்தில் பொருளாதார விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தில் அமைச்சராக தாம் பொறுப்பேற்க முடிவு செய்திருப்பது குறித்து சிலாங்கூர் சுல்தானிடம் தெரிவித்ததோடு, அவருடனான ஆலோசனைக்குப் பிறகு, சுல்தான் இதற்கு ஒப்புதல் அளித்ததாக அஸ்மின் அலி தெரிவித்தார்.

மேலும், சிலாங்கூர் சுல்தான் தமக்கு ஆசி வழங்கியதாகவும் அவர் கூறினார்.

இன்று பிற்பகலில், அஸ்மின் அலி அமைச்சராக பதவியேற்க உள்ளார்  எனக் கூறப்பட்டது.

சிலாங்கூர் மந்திரி புசார் பொறுப்புக்கு பொருத்தமானவர் அடையாளம் காணப்பட்டு சுல்தானின் ஒப்புதலோடு அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் வரையில் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி புசாராக இருந்து வருவார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker