Latestமலேசியா

ரூ. 12,000 கோடி மோசடி: நிரவ் மோடியை மீட்குமா இந்தியா?

புதுடில்லி, மே. 21 -மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹூல் சோக்சிஆகியோர் பஞ்சாப் நேசனல் வங்கி, மும்பை கிளையில் 13 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாடு தப்பிச் சென்றனர். நிரவ்மோடி தற்போது லண்டனில் தங்கி இருப்பதாக தெரிகிறது.

நிரவ் மோடி மட்டுமல்லாது அவரது தந்தை தீபக் மோடி, சகோதரர் நிஜால் மோடி சகோதரி பூர்வி மேத்தா மற்றும் கணவர் மாய்ங்க் மேத்தா ஆகியோரும் வெளிநாடு தப்பிச் சென்றனர்.

இவர்கள் அனைவரையும் 15 நாட்களுக்குள் மும்பை அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்கும் படி மே மாதம் முதல் வாரத்தில் இமெயில் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. இவர்கள் ஆஜாராகவில்லை என்றால் அடுத்த சம்மன் அனுப்பப்படும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருக்கும் நிரவ் மோடி தற்போது லண்டனில் பதுங்கி இருப்பதாகவும் அவரது சகோதரர் நிவால் மோடி பெல்ஜியத்தில் பதுங்கி இருப்பதாகவும் அமலாக்க துறையினர் தெரிவித்துனர்.
இவரது சகோதரி மற்றும் அவரது கணவர் ஹாங்காங்கில் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் நிரவ்மோடி மற்றும் சோக்கிக்கு பிடிக்க மீண்டும் இண்டர் போல் உதவியை நாடவும் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் விடுக்கவும் சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படும் பட்சத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட
நபர்கள் பதுங்கியுள்ள நாட்டிலேயே கைது செய்யப்பட்டு அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker