Latest

எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் நஜீப்!

புத்ராஜெயா,மே.22- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி.யின் தொடர்பான வழக்கிற்கு விளக்கமளிக்க இன்று காலை மணி 9.43 அளவில் எம்.ஏ.சி.சி. எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வருகைப் புரிந்தார்.

நீல நிற சட்டையும் கோட் சூட்டும் அணிந்திருந்த அவர் QMN11 பதிவு எண்ணைக் கொண்டிருந்த எம்.பி.வி. ரக டோயோட்டா வெல்பையரில் வந்து இறங்கினார்.

அதே வேளையில், எஸ்.ஆர்.சி.யின் கட்டடத்தின் வெளியே சுமார் 50க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.

முன்னதாக எம்.ஏ.சி.சி. எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தைத் தெரிவிக்க இன்று ஆஜராகுமாறு நஜீப்பிற்கு கடந்த வெள்ளிக்கிழமை கோரிக்கை கடிதம் விடுக்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker