Latestஇந்தியா

நடிகர் எஸ். வி. சேகர்  நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

சென்னை, மே. 22- பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் நடிகர் எஸ்.வி சேகர், வரும் ஜூலை  5 ஆம் தேதி கரூர் நீதிமன்றத்தில்  ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆளுனர் பன்வரிலால் புரோகித் பேட்டியளித்த போது பெண் நிருபர் ஒருவரது கன்னத்தை தட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து தன் செயலுக்காக ஆளுனர் மன்னிப்பு கேட்டார்.

இதனைச் சுட்டிக்காட்டிய பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி. சேகர், சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இது சம்பந்தமாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து எஸ்வி சேகரை போலிசார் கைது செய்யக்கூடும் என தகவல்  வெளியானது. ஆனால் இது வரை அவர் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையில் பெண்  பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்து பதிவிட்ட எஸ் வி சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். இதன் முதல் கட்ட விசாரணை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. அப்போது சாட்சிகளிடம் விசாரணை  நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா வருகிற ஜூலை மாதம் 5 ஆம் தேதி நடிகர் எஸ்விசேகர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென  உத்தரவு பிறப்பித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker