Latestமலேசியா

‘பொருந்தாத’  சட்டங்கள் மறுபரிசீலனை – மொகிதீன்

கோலாலம்பூர், மே.22- இன்றைய காலக் கட்டத்திற்கு பொருந்தாத அல்லது ஏற்புடைய வகையில் அமைந்திராத ஏழு தேசிய பாதுகாப்பு சட்டங்களை உள்துறை அமைச்சு மறுபரிசீலனை செய்யும் என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் கூறினார்.

1984-ஆம் ஆண்டின் அச்சிடுதல் மற்றும் வெளியிடுதல் ஆகியவற்றை தடுக்கும் சட்டம், 1948-ஆம் ஆண்டின் தேசத் துரோகச் சட்டம், 2012-ஆம் ஆண்டின் அமைதிப் பேரணிச் சட்டம், ‘போக்கா’ எனப்படும் குற்றச்செயல் தடுப்பு சட்டம், ‘சோஸ்மா’ எனப்படும் பாதுகாப்பு குற்றச்செயல் மீதான சிறப்பு நடவடிக்கை சட்டம், ‘போட்டா’ எனப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் கட்டாய மரண தண்டனை போன்ற சட்டங்கள் மறிபரீசிலனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சட்டங்கள் குறித்து, மலேசிய மனித ஆணையமான (சுஹாகாம்), மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் தங்களின் கருத்துகளை உள்துறை அமைச்சுடன் பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று முகைதீன் சொன்னார்.

“இந்தச் சட்டங்கள் மறுபரீசீலிக்கப்படும். தேவைப்பட்டால், அச்சட்டங்கள் அகற்றப்பட்டு, தேசிய பாதுகாப்பிற்கு ஏற்புடைய இதர சட்டங்கள் அமலுக்கு கொண்டு வரப்படலாம். இவற்றை நடைமுறைக்கு கொண்டு வர சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர், அவை அமல்படுத்தப் படும்” என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker