Latestமலேசியா

முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

கோலாலம்பூர் ,மே.22- கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் அரசாங்கச் செயலாளர் டான்ஸ்ரீ ஹாஷிம் அமான், சிகிச்சைப் பலன் அளிக்காமல் நேற்று காலமானார். இதனை நாட்டின் தற்போதைய அரசாங்கச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்ஸா உறுதிப்படுத்தினார்.

பொதுச் சேவையின் தரத்தை உயர்த்த எப்பொழுதும் முயற்சித்தவரும் பல அனுபவங்களைக் கொண்டவருமான டான்ஸ்ரீ ஹாஷிம் அமானின் குடும்பத்திற்கு அவர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

89 வயதான ஹாஷிம் அமான், அரசாங்க ஊழியராக ஏறக்குறைய 27 வருடம் பணியாற்றி வந்தார். சுகாதார மற்றும் தற்காப்பு அமைச்சின் தலைமைச் செயலாளராக பதவியேற்ற அவர், அதன் பின்னர் அரசாங்கச் செயலாளராக 1980ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரைப் பதவி வகித்து வந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker