Latestமலேசியா

11 பெட்டி பணம் எண்ணியாச்சு! இன்னும் 15 பெட்டி இருக்குது!

கோலாலம்பூர், மே.22- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு சொந்தமான வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில், 11 பெட்டிகளிலுள்ள மில்லியன் கணக்கான பணத்தை போலீசார் எண்ணி முடித்து விட்டனர்.

ஜாலான் துன் ரசாக்கில் உள்ள கே.பி.ஜெ கட்டடத்திற்கு கொண்டு வரப்பட்ட 26 பெட்டிகளில், 11 பெட்டிகளில் உள்ள பணத்தை புக்கிட் அமானின் வர்த்தக குற்றங்கள் பிரிவு எண்ணி முடித்து விட்டதாக பெரித்தா ஹரியான் தகவல் வெளியிட்டுள்ளது.

11 பெட்டிகளில் உள்ள பணம் எண்ணி முடிக்கப்பட்ட வேளையில், மேலும் 15 பெட்டிகளில் இருந்த பணத்தை நேற்று காலை 10 மணிக்கு, அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர்.

அவற்றை எண்ணி முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. மலேசிய ரிங்கிட்டுடம், அந்நிய நாட்டு பணமும் இருப்பதால், அவற்றை உடனடியாக எண்ணுவது சிரமம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, நஜிப்பிற்கு சொந்தமான இடங்களில் போலீஸ் அதிரடி சோதனையை நிகழ்த்தியது. அவற்றில் பல பண பெட்டிகள், விலையுயர்ந்த கைப்பைகள், நகைகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker