Latestஉலகம்

1,172 முறை இரத்த தானம்-  24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றிய மனிதர்!

சிட்னி, மே .22- இரத்ததானம் செய்வதற்கு பரந்த மனம் வேண்டும். அதற்கு  இப்போதும் கூட பலர் மறுப்பதுண்டு. ஆஸ்திரேலியாவில் 81 வயது மனிதர் ஒருவர் தன் வாழ்நாளை    இரத்த தானத்திற்காக அர்ப்பணித்துள்ளார்

அவரால் காப்பாற்றப்பட்ட உயிர்கள் ஏராளம். அவரின் பெயர் ஜேம்ஸ் ஹாரிசன். “தங்கக் கை மனிதர்“. என்பது அவரின் செல்லப் பெயர். 18 வயது முதல் 81 வயது வரை 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக இரத்ததானம் செய்த ஜேம்ஸ் ஹாரிசனின் இளம் வயது வாழ்க்கை துயரமானது.

1936 ஆம் ஆண்டு பிறந்த   ஜேம்ஸ் ஹாரிசனுக்கு 14 வயதான போது நுரையீரல் தொற்று காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 6 மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின் 7 லிட்டர்  இரத்தம் ஜேம்ஸ் ஹாரிசனுக்கு  செலுத்தியாக வேண்டும். அவரது பெற்றோர் படாத பாடுபட்டனர்.  அப்போது தான் ஜேம்ஸ் ஹாரிசன் இரத்தத்தின் மகிமையை உணர்ந்தார்.  18 வயதை எட்டியவுடன்   இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற மனதுக்குள் உறுதி பூண்டார்.

இதில் ஆச்சரியம் என்னவெனில் ஜேம்ஸ் ஹாரிசன்  இரத்தத்தில்அண்டி டிமருந்து தயாரிக்க உதவும் பிளாஸ்மா கலந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

iஇவர் தனது வாழ்நாளில் மொத்தம் 1,173 முறை இரத்தானம் அளித்து சாதனை படைத்துள்ளார். இவரது இரத்தத்தில் உள்ள அண்டிடி தயாரிக்க உதவும் பிளாஸ்மா மூலம் கிட்டத்தட்ட  24 லட்சம்  குழந்தைகளின் உயிரை இவர் காப்பாற்றியுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker