Latestஉலகம்

அந்த அதிரடி ‘ஜெட் லீ’யா இவர்? ரசிகர்கள் அதிர்ச்சி!

ஹாங்காங், மே 23- ஹாங்காங்கிலிருந்து ஹாலிவுட்டுக்குச் சென்று கலக்கியவர்கள் ஒரு சிலர் நாயகர்கள் தான். அந்த வகையில் ஜேக்கி சானை தொடர்ந்து ஹாலிவுட் சென்று கலக்கிய சீன நடிகர் என்றால் அது ஜெட்லீ தான். அவருக்கு திடீரென என்ன நேர்ந்தது?

இவர் தற்போது “ஹைப்பர்தைரோட்டிஷம்” (hyperthyroidism) என்ற நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் வயதானது போல் ஆகிவிட்டார். இவரிடம் புகைப்படம் எடுத்த ரசிகர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டது மட்டுமில்லாமல் அவரின் அண்மைய தோற்றத்துடன் உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்த அவரது அனைத்துலக ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர் அது மட்டுமின்றி பலரும் இது ஜெட் லீ இல்லை என்றும் கூறி வருகின்றனர்.
எது உண்மை, எது இல்லை என்ற சந்தேகமே பார்ப்போர் மனதுக்குள் வலுக்கிறது. ஜெட் லீ ஒரு பிரபலமான தற்காற்புக் கலைஞர். சிறந்த அதிரடி நடிகர். அனைத்துலக திரையுலகில் வாகை சூடிய வெற்றி வீரர். இன்று உலகில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட சீனர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker