Latestஉலகம்

கம்போடியாவில் 2 நாள் உலகத் தமிழர் மாநாடு!

அங்கோர்வாட், மே. 23- உலகிலேயே மிகப் பெரிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர் வாட்டுக்கு அருகிலுள்ள உணவக மையத்தில் உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றது.

மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புரூனை மற்றும் பப்புவா நியூகினியா உள்லிட்ட பல நாடுகளைச்ச் சேர்ந்த பேராளர்கள் வருகை தந்திருந்தனர்.

இன்றைய தென்கிழக்காசியாவின் பெருமை- பழமை வாய்ந்த தமிழர் கோவில்கள், இன்றைய தென்கிழக்காசிய மக்கள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் பண்டைத் தமிழர்களின் கலை கலாசாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக் கலை மற்றும் தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் மாநாடாக இது அமைந்தது.

பிற ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், கொரியா, தைவான், இலங்கை, மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி, பெல்ஜியம் டென்மார்க், லண்டன், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் வருகை தந்தனர்.

தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும் மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, அனைத்துலக கூட்டறவுத் தமிழ் சங்கம், தென் கிழக்காசிய தமிழ் சங்கம், உலக தமிழ் அமைப்புகள் என பல அமைப்புகள் கூட்டு முயற்சியாலும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட விழா மலர் வெளியிடப்பட்டது. உலகத் தமிழர் ஒன்றிணைந்த பன்னாட்டு வணிக மையம் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டில் சிறப்பு இயக்குநர் தக்கர்பச்சான், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker