Latestஉலகம்

திருமணத்தில், ஆப்பிரிக்கா நண்பனை கண்டு சைகையில் பேசிய இளவரசர்!

லண்டன், மே.23- பிரிட்டீஷ் இளவரசர் ஹர்ரி தன்னுடைய திருமணத்தின் போது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நண்பனை கையசைத்த செய்கைமொழியில் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

பிரிட்டன் இளவரசர் ஹர்ரி – மேகன் மார்க்கல் திருமணம் கடந்த வாரம் கோலகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் வின்ஸ்டர் வீதியில் ஹர்ரி – மார்க்கல் குதிரை வண்டியில் ஊர்வலம் சென்ற போது மார்க்கல் தன்னுடைய முன்னாள் ஆசிரியரைப் பார்த்து வியப்படைந்தார்.

இந்நிலையில், இளவரசர் ஹர்ரி தன்னுடைய ஆப்பிரிக்கா நண்பனான முட்சு பொட்சென்” (வயது 18) திருமணத்திற்கு அழைத்திருந்தார். அப்போது வின்ஸ்டர்கேஸ்டர் தேவாலயத்திற்குள் நுழைவதற்காக இளவரசர் ஹர்ரி சென்ற போது அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்த்து தெரிவிக்க காத்திருந்தனர்.

அப்போது ஹர்ரி தன்னுடைய ஆப்பிரிக்கா நண்பனான முட்சு பொட்சென்னை விரல் அசைத்து செய்கைமொழியில் பேசினார். அது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

இளவரசர் ஹர்ரி கடந்த 2004 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் லெசோத்தோவில் உள்ள மான்ஸ் அஸ் சிறுவர் காப்பகத்திற்கு சென்றார், அப்போது ஏற்பட்ட அறிமுகம் முட்சு பொட்சென்.

அங்கு இருவரும் ஒன்றாக மரம் நட்டு வைத்தது போன்ற புகைப்படங்கள் எல்லாம் அன்றைய பத்திரிகைகளில் வந்தன. அதன் பின் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருவதால் ஹர்ரி அவரை திருமணத்திற்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மான்ஸ் அஸ் சிறுவர் காப்பகத்தில் ஆதரவற்றோர் மற்றும் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். மேலும் 4 வயதில் இளவரசர் ஹர்ரிக்கு அறிமுகமான முட்சு பொட்சென்னுக்கு தற்போது வயது 18 என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker