Latestமலேசியா

நஜிப்பின் சாக்லெட் புகாருக்கு பதிலடி: தொடங்கியது சாக்லெட் இயக்கம்!

கோலாலம்பூர், மே.23- முன்னாள் பிரதமர் ட்த்தோஶ்ரீ நஜிப் வீட்டைச் சோதனைச் செய்த போலீஸ்காரர்கள், அவரின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த சாக்லெட்டுகளை திருடிச் சாப்பிட்டு விட்டனர் என்று நஜிப்பின் புகாருக்கு பதிலடி தருவதில் வலைத் தளவாசிகள் இறங்கி இருக்கின்றனர்.

போலீசாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மலேசியர்கள் #chocs4cops என்ற ‘ஹேஷ்டெக்’கை கொண்டு அவர்களுக்கு சாக்லெட்டுகளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பிரதமராக பணியாற்றி வந்த நஜிப், பல்வேறான ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் பரவலாகி வரும் வேளையில், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற அவர், அம்னோ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

எவ்வித ஊழல்களிலும் தாம் சம்பந்தப்படவில்லை என்று நஜிப் மறுத்துள்ள போதிலும், கடந்த வாரம் அவரின் வீட்டில் போலீஸ் சோதனை நடைபெற்றது.

அந்தச் சோதனையின் போது, தங்கள் வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப் பட்டிருந்த சாக்லெட்டுகளை போலீசார் எடுத்துச் சாப்பிட்டு விட்டனர் என்று நஜிப் தனது வழக்கறிஞர் வாயிலாக புகார் கொடுத்திருந்தார்.

அந்தப் புகார், பொதுமக்களை பெரிதளவில் பாதித்து விட்டது. சாக்லெட்டுக்காக எல்லாம் புகார் செய்வதா? என்று கடுப்பாகிய பலர் தங்களின் சமூக வலைத்தளங்களில் நஜிப்பை சாடினர். அதனைத் தொடர்ந்து, போலீஸ்காரர்களுக்கு சாக்லெட்டுகளை அனுப்பும் இயக்கத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

எதிர்வரும் சனிக்கிழமையன்று, காவல் நிலையங்களுக்கு சாக்லெட்டுகளை அனுப்பி வைக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த #choc4cops என்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள சித்தி காசிம் என்ற வழக்கறிஞர், “அந்தப் புகாரை பார்த்ததும், போலீஸ்காரர்களுக்கு எனது ஆதரவை வழங்க வேண்டும் என்று நான் முடிவெடுத்து விட்டேன்” என்று கூறினார். “சாக்லெட் குறித்து புகார் செய்வது சிறுபிள்ளைத் தனமாக எனக்கு தெரிந்தது” என்றார் அவர்.

“நஜிப் அவர்களே, சாக்லெட் திருட்டுப் போனது குறித்து நீங்கள் குறைபட்டுக் கொள்கிறீர்கள். மக்கள் பணத்தை சுருட்டியது குறித்து உங்களின் கருத்து என்ன?” என்று பலர் சமூக வலைத் தளங்களில் கேள்வி கேட்டு துளைக்கின்றனர்.

‘தன் வீட்டு சாக்லெட்டை சாப்பிட்டு விட்டார்களே என வருத்தமும் கோபமும் படும் நஜிப், எங்களின் பணம் கோடி கோடியாய் சாப்பிடப் பட்டது குறித்து நாங்கள் எப்படி வருத்தப்பட வேண்டும் என்பதை யோசித்துப் பார்த்தாரா? என வலைதளவாசிகள் கேள்விக் கணைகளைத் தொடுத்த வண்ணம் உள்ளனர்,.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker