Latestமலேசியா

வந்தார் அருள் கந்தா! லிம் குவானுடன் சந்திப்பா?

புத்ராஜெயா,மே.23- 1எம்டிபி நிர்வாக தலைமைச் செயல்முறை அதிகாரி அருள் கந்தா இன்று மதியம் 2.43 மணி அளவில் நிதி அமைச்சகத்திற்கு வந்தார்.

கருப்பு நிற எம்.பி.வி. ரக வாகனத்தில் வந்திறங்கிய அவர், நிதி அமைச்சர் லிம் குவான் எங்கை 1எம்டிபி தொடர்பாக சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. நிதி அமைச்சகம் வந்த காரணத்தைப் பற்றி வினவுகையில் அவர் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நிதியமைச்சர் லிம் குவான் எங், 1எம்டிபி அதன் கடனுக்கான வட்டியைச் செலுத்தவில்லை எனவும் மாறாக, 1எம்டிபியை மீட்பதற்காக நிதியமைச்சு 698 கோடி ரிங்கிட் செலுத்தி இருப்பதாகவும் விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்மாத இறுதிக்குள் செலுத்தவேண்டிய 1எம்டிபி நிறுவனக் கடனுக்கான வட்டித் தொகையை யார் செலுத்துவது என்று அருள் கந்தா தெளிவுப்படுத்த வேண்டும் என லிம் குவான் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்பிலேயே 1எம்டிபியின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான அருள் கந்தா நிதியமைச்சுக்கு வந்திருக்கக்கூடும் என்று தெரிய வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker