Latestஉலகம்

பறக்கும் விமானத்தில் சிறு நீர் கழித்த ஆசாமி கைது! 

வாஷிங்டன், மே 23- அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பலரின் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.
கொலராடா மாநிலத்தில் இயங்கும் உள்ளூர் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.

இச்சம்பவம் விமானத்தில் உள்ள காமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
அந்த விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தெரிவிக்கையில், அந்த நபர் மது அருந்தியதாகவும் அவரது முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பெண் குரல் எழுப்பி திட்டவும் விமான ஊழியர்கள் தலையிட்டுள்ளனர். அதனையடுத்து அந்நபரை விமானத்தின் பின் இருக்கையில் அமரும்படி பணித்துள்ளனர்.

இந்நிலையில் அந்நபர் திடீரென்று இருக்கையில் அமர்ந்தவாறே சிறுநீர் கழித்துள்ளார். இதைத் கண்ட பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூச்சலிட்டுள்ளனர்.

அந்தச் சம்பவம் பற்றி விமானிக்கு தெரியப்படுத்திய பின்னர், அவர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது., சம்பந்தப்பட்ட பயணியை டென்வர் விமான நிலையத்தில் இறங்கி விட்டதும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker