Latestமலேசியா

MH370-ஐ தேடும் ஒப்பந்தம்: அரசு மறு ஆய்வு!-மகாதீர்

கோலாலம்பூர்,மே.23- அமெரிக்க நிறுவனத்துடனான  MH370 விமானத்தைத் தேடும் ஒப்பந்தத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்யும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர்  தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற MH370 விமானம் மாயமானது. அந்த விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை..

ஜூன் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த விமானம் தேடும் படலத்தின் முடிவில், தெற்கு இந்தியப் பெருங்கடலில் விமானத்தைக் கண்டுபிடித்தால் ஹூஸ்டனில் உள்ள ‘ஓசியன் இன்பினிட்டி’ எனப்படும் அமெரிக்க நிறுவனத்திற்கு $70 மில்லியன் (RM278 மில்லியன்) வரை வழங்க இதற்கு முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் ஒப்புக்கொண்டது.

“இந்த விமானம் தேடும் படலத்தின் விவரங்கள் பற்றி நாங்கள் தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம். ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்த பின்னர் அது பயனற்றதாக இருந்தால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவோம்,” என புத்ராஜெயாவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் தெரிவித்தார்.

அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நிதிப் பிரச்னையை கருத்தில் கொண்டு அரசு செலவினங்களைக் குறைப்பதற்காக இது அறிவிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker