Latestமலேசியா

அன்னிய தொழிலாளர்களை நம்பி இருக்கக் கூடாது! – குலசேகரன்

கோலாலம்பூர், மே.24- வெளிநாட்டு தொழிலாளர்களின் உழைப்பை சார்ந்திருக்கும் நிலைமை தொடரக் கூடாது என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

மலேசியர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பொருட்டு, வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் செயல்திட்டம் பரிசீலிக்கப்படும் என்று குலசேகரன் சொன்னார்.

“தேவைக்கு தகுந்தார் போல், வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவர். ஆனால், வேலையில்லாமல் திண்டாடும் மலேசியர்களுக்கு தான் முதலில் வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு, வங்காளதேசத்திலிருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை, மலேசியாவிற்கு கொண்டு வரும் பொருட்டு, முந்தைய மலேசிய அரசாங்கமும், வங்காளதேசத்து அரசாங்கமும் ஒப்பந்தம் ஒன்றை செய்துக் கொண்டன. அது குறித்து குலசேகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

அதுமட்டுமல்லாது, நாட்டின் குறைந்தப் பட்ச ஊதியம் ரிம.1,500-ஆக உயர்த்தப்படும் என்ற பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அவ்வமைச்சு குறைந்தப் பட்ச ஊதிய மதிப்பீடை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

இருந்த போதிலும், நாட்டின் கடன் தொகை மற்றும் நிதி நிலைப்பாடை சுட்டிக் காட்டி, அந்தக் குறைந்த பட்ச ஊதிய அதிகரிப்பு அமலுக்கு வருவதற்கு சற்று கால அவகாசம் தேவைப் படுகிறது என்று அவர் சொன்னார். இதனிடையில், வேலை வாய்ப்பு காப்புறுதி திட்டம், தொடரப் படும் என்றும் அவர் தகவல் தெரிவித்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker