Latestமலேசியா

அமைச்சர்கள் சம்பளக் குறைப்பு: கியூபெக்ஸ் வரவேற்றது!

கோலாலம்பூர்,மே.24- அமைச்சர்களின் சம்பளத்தில் 10 விழுக்காடு குறைக்கப்படும் என்ற பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அறிவிப்பு, நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கான சிறந்த அணுகுமுறை என கியூபெக்ஸின் தலைவர் அஸி மூடா தெரிவித்தார்.

இது நாட்டின் நிதி நிலைமையை சரிசெய்ய முயலும் புதிய அரசாங்கத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. இதனைப் பொருத்தமான புதிய முயற்சியாக கியூபெக்ஸ் கருதுகிறது.

அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களும் தங்களுக்கு மற்ற சலுகைகள் கிடைக்கும் என்பதால் இத்தீர்மானத்திற்கு ஒப்புக் கொண்டனர்.

அரசாங்க ஊழியர்களின் தற்போதைய வருமானமே அவர்களுக்கு போதவில்லை என்பதால் அமைச்சர்களின் வருமானம் மட்டுமே குறைக்கப்பட வேண்டும்.

மேலும், ‘ஸ்பாட்’ எனப்படும் நிலப் போக்குவரத்து ஆணையம் அகற்றப்பட்டதால் அதன் அரசாங்க ஊழியர்கள் வேலையிழக்ககூடாது. மாறாக, அவர்கள் வேறு அமைச்சு அல்லது துறைகளில் அமர்த்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக அஸி மூடா கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker