Latestமலேசியா

‘என் வீட்டில் எம்ஏசிசி எடுத்தது போலி கடிகாரங்களே!-டத்தோஸ்ரீ அஷீஸ்

கோலாலம்பூர்,மே.24- “என் வீட்டில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படும் விலைமதிப்புள்ள கைக்கடிகாரங்களில் பெரும்பாலானவை போலியானவை. அவை சாதாரணமாக பசாரில் வாங்கப்பட்டவை என்கிறார் ‘தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம்.

டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸின் வீட்டில் புகுந்து திடீர்ச் சோதனைகளை நடத்திய ஊழல் தடுப்பு அதிகாரிகள், 5 லட்சம் ரிங்கிட் ரொக்கம், 12 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய அன்னிய கரன்சிகள், 20க்கும் மேற்பட்ட விலை மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், மற்றும் நகைகள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து, கருத்துரைத்த டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ், அந்தக் கடிகாரங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை போலி ‘பிராண்டு’கள் என்றார். மேலும், ‘என் வீட்டில் கைப்பற்றப்பட்ட 5 லட்சம் ரிங்கிட் ரொக்கம், அம்னோ பணம். அதன் வங்கிக் கணக்கிலிருந்து நோன்பு பெருநாள் விருந்துக்காக மீட்டேன் என்கிறார்.

இதனிடையே, ‘தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அவர் அறிவித்தார். பாலிங் தொகுதி எம்.பி.யுமான அப்துல் அஸிஸ், தாபோங் ஹாஜி விடுத்த பல்வேறு தனியார் குத்தகைகளில் ஊழல் புரிந்ததாக சந்தேகிக்கப் படுகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker