Latestமலேசியா

நேர்மைகெட்ட மனிதர் அருள் கந்தா!  -லிம் சாடல்

கோலாலம்பூர், மே.24- நிதியமைச்சில் 1எம்டிபி தலைமை நிர்வாக செயல்நிலை அதிகாரியான அருள் கந்தா அளித்த விளக்கம் குறித்து லிம் குவான் எங் அதிர்ச்சி தெரிவித்தார்.

1எம்டிபி நிறுவனம் கிட்டத்தட்ட திவாலாகிவிட்டது என்கிறார் அருள் கந்தா. அந்நிறுவனத்தின் நிதி நிலவரம் குறித்து தமக்குத் தெளிவாக தெரியவில்லை என்கிறார். அனுபவமிக்க முதலீட்டுத்துறை வங்கி அதிகாரியான அருள் கந்தா, இப்படி தமக்கு தெளிவாகத் தெரியவில்லை என்றெல்லாம் கூறுவது தமக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது என்றார் லிம்.

மிக மோசமான நேர்மை கெட்ட மனிதர் இவர். நம்பவே முடியாதவர் அருள் கந்தா என்று லிம் சாடினார்.

இம்மாத இறுதிக்குள் 1எம்டிபி, தனது கடனுக்கான வட்டியாக 143 மில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும். அந்தப் பணத்தை 1எம்டிபியால் கட்ட முடியாது என்கிறார் அருள் கந்தா.

ஆனால், இவ்வளவு காலமும் 1எம்டிபி, சிறப்பான நிதி நிலையில் இருக்கிறது என்று நாடு தழுவிய அளவில் கூட்டம் போட்டு இவர் பேசி வந்தார் என்று லிம் சுட்டிக் காட்டினார். கிட்டதட்ட 980 கோடி ரிங்கிட் மதிப்புடைய நிதி முதலீட்டு பங்குகள் 1எம்டிபி வசம் இருக்கிறது என அதன் அதிகாரிகள் கூறி வந்தனர்.

இந்த முதலீட்டு பங்குகள் மூலம் பணத்தை மீட்டால், அந்நிறுவனம் நிதியமைச்சிடம் இதுவரை பெற்ற 700 கோடி ரிங்கிட் கடனை அடைத்துவிடலாம். எனவே, அந்த 980 கோடி ரிங்கிட் முதலீட்டு பங்குகள் எங்கு இருக்கின்றன? என்று கேட்டால், அந்த பங்குகளின் மதிப்பு எவ்வளவு என்று தெரியாது, அப்படிப்பட்ட பங்குகள் இருக்கின்றனவா? என்று கூடத் தெரியாது என்கிறார் அருள் கந்தா.

ஆனால், இவர் தான் அண்மையில் மலேசியக் கினிக்கு அளித்த பேட்டியில் 1எம்டிபி கடனை அடைக்கத் தேவையான அளவுக்கு 980 கோடி ரிங்கிட் முதலீட்டு பங்குகள் அதனிடம் உண்டு என்று கூறியவர் என நிதியமைச்சர் லிம் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker