Latestமலேசியா

பதவியேற்பை புறக்கணிப்பதா? கோபத்தில் பெர்லிஸ் மன்னர்!

ஆராவ்,மே.24- பெர்லிஸ் மந்திரி புசாரின் பதவியேற்பு விழாவிற்கு தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் வருகைத் தராததால் பெர்லிஸ் மன்னர் துவாங்கு சைட் ஸிராஜூடின் கோபத்தில் உள்ளார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு அந்த ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட போது, அவர்கள் பெர்லிஸில் இருந்தனர் என அவர் தெரிவித்தார்.

அந்த ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை குறிப்பிட மறுத்ததோடு, அவர்கள் தற்போது கோலாலம்பூரில் உள்ளனர் எனத் தனக்கு தகவல் கிடைத்ததாக பெர்லிஸ் மன்னர் கூறினார்.

முன்னதாக டத்தோஸ்ரீ அஸ்லான் மான் பெர்லிஸ் மந்திரி புசாராக இன்று காலை 11.10 மணிக்கு பெர்லிஸ் மன்னர் துவாங்கு சைட் ஸிராஜூடின் முன்னிலையில் இரண்டாவது தவணையாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

மூன்று பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டு பாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துக் கொண்டனர்.

டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம், தனது சகோதரரும் தம்புன் துலான் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ இஸ்மாயில் காசிமை பெர்லிஸ் மந்திரி புசார் வேட்பாளராக அறிவித்ததைத் தொடர்ந்து இதற்கு முன்பு நடைபெறவிருந்த பெர்லிஸ் மந்திரி புசாரின் பதவியேற்பு விழா ஒதுக்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker