Latestமலேசியா

“ரிம.1 ட்ரில்லியன் கடனா? என்ன பேச்சு இது?” – நஜீப் கண்டனம்

கோலாலம்பூர்,மே.24-நாட்டின் கடன் தொகைக் குறித்து மிக அதிகப்படுத்திக் காட்டும் பக்காத்தான் அரசாங்கத்தின் செயலால் நமது நிதிச் சந்தைக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் எம்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் சாடினார்.

அமைச்சர்கள் எல்லாம் தங்களுடைய அறிக்கைகளை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் சொல்கிற வார்த்தைகள், வெளியிடுகின்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீங்கள் எதிர்க்கட்சிகளாக இருந்த போது அதன் ‘எடை’ வேறு. பிரதமர், நிதியமைச்சர் என்று அதிகாரத்தில் இருக்கும் போது அதன் எடை வேறு என்று நஜீப் சுட்டிக் காட்டினார்.

நாட்டின் மொத்த உற்பத்தியில் அரசாங்கத்தின் கடன் 65 விழுக்காடு உள்ளது என்று சொல்கிறார்கள். ஆனால், அதிகாரப்பூர்வ மதிப்பீடு 50 புள்ளி 9 விழுக்காடுதான். திடீரென இவ்வளவு அதிகப்படுத்திக் காட்டுகின்றனர் என்றார் அவர்.

இப்போது தேசத்தின் கடன் 1 ட்ரில்லியன் ரிங்கிட் (ஒரு லட்சம் கோடி) என்கிறார்கள். என்ன அர்த்தத்தில் இதைச் சொல்கிறார்கள் என்ற விளக்கமே கிடையாது. இப்படியெல்லாம் பேசுவதால் நிதிச் சந்தை நிலை பெறாமல் போகும். கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் அச்ச்சமடைய நேரிடும். நமது பேங்க் நெகாரா உள்ளிட்ட நிதி அமைச்சுகளின் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறையும்.

நமது தேசிய கடன்நிலை குறித்த கவலையினால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்படும் என்று பொருளாதார செய்தித்தளமான ‘தி எட்ஜ் மார்க்கெட்ஸ்” கூறியிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker