Latestமலேசியா

இனிமேல் ‘கோப்பி -ஓ லைசென்ஸ்’ எடுக்க கிடையாது! -அமைச்சர்

புத்ராஜெயா, மே.24- வாகனம் ஓட்டும் பயிற்சி சோதனையை மேற்கொள்ளாமல், பணம் கொடுத்து வாகன லைசன்ஸ்களை எடுக்கும் ‘கோப்பி -ஓ லைசென்ஸ்’ முறையெல்லாம் இனிமேல் கிடையாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

“பணத்தை மட்டும் செலுத்தி வாகனம் ஓட்டும் லைசன்ஸ் பெற்றுக் கொள்ளும் நடைமுறை இனிமேற்கொண்டு தொடராது. பணத்தை செலுத்தினால், நிச்சயமாக லைசன்ஸ் என சில வாகன பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வந்தன. இனிமேற்கொண்டு, அதெல்லாம் எங்கும் கிடைக்காது” என்று அவர் சொன்னார்.

“சீனர்கள் ‘கவ்தீம்’ என்ற அடைமொழியை இவ்வாறான செயல்களுக்கு உபயோகிப்பர். இப்போது அனைவரும் அந்த அடைமொழியை பின்பற்றுகின்றனர். இனிமேல் அது தொடராது” என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான ‘சேவை’களை வழங்கும் நிலையங்கள் கண்டறியப் பட்டால், அந்நிலையங்களின் லைசன்ஸ் உரிமை பறிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

“டி ரக லைசன்ஸ் பெற்றுக் கொள்ள, ரிம.1,150 செலவாகும். அதனைத் தாண்டி, மேலும் கட்டணம் வசூலிக்கும் நிலையங்கள், தங்களின் ரசீதுகளை எங்களிடம் காண்பிக்க வேண்டும். நேர்மையை பின்பற்றும் பொருட்டு, இந்த புதிய விதிமுறை விதிக்கப்படுகிறது” என்றார் அவர்.

இதனிடையில், வாகன ஓட்டும் பயிற்சிகளுக்காக ‘மெனுவல் அமைப்புமுறை’ வழங்கப்படுகின்றன. படிப்படியாக, ஆட்டோ அமைப்பு முறையை அமைச்சு அமல்படுத்த உள்ளது. இதன் வாயிலாக, அனைவரும் வாகனம் ஓட்டும் சோதனையை சிறப்பாக செய்ய முடியும்” என்று அந்தோனி லோக் சொன்னார்.

“அதுமட்டுமல்லாமல், வாகனம் ஓட்டும் சோதனைக்கு பயன்படுத்தும் கார்களில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தும் முயற்சியையும் நாங்கள் எடுக்கவிருக்கிறோம்” என்று அவர் விவரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker