Latestசினிமா

ஆர்யாவின் ‘மணப்பெண்’ அபர்னதி- ஜி.வி.பிரகாஷின் நாயகி!

சென்னை,மே.25- எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய அபர்னதி, ஜி.வி பிரகாஷ் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மக்கள் மத்தியில் மிக பிரபலமான மற்றொரு நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ தான்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பெண்களில் ஒருவர் தான் இந்த அபர்னதி.
16 பெண்கள் போட்டியிட்டு வெற்றி பெறும் ஒருவரைத் தான் ஆர்யா திருமணம் செய்யப்போவதாக கூறப்பட்டது.

ஆனால், ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆர்யாவுக்கு சரியான ஜோடி அபர்னதி தான் என்று அவரின் நண்பர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் நிகழ்ச்சி இறுதியில் இறுதிவரை சென்றவர் தான் இந்த அபர்னதி.

இந்நிலையில், ஜி.வி பிரகாஷ் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ‘காவியத் தலைவன்’ படத்தை இயக்கிய வசந்தபாலன் இயக்குகிறார். . அதே வேளை இன்று ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ”செம” படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker