Latestமலேசியா

சபாவில் பெண் துணை முதல்வராக கிறிஸ்டினா நியமனம்!

கோத்தா கினாபாலு, மே.25- சபாவில் முதன் முறையாக, சீனப் பெண்மனி ஒருவர் துணை முதல்வராக நியமிக்கப் பட்டுள்ளார். தாவாவ் தொகுதி எம்பியும், அப்பி அப்பி தொகுதி சட்டம்ன்ற உறுப்பினருமான கிறிஸ்டினா லியூ, துணை முதல்வராகை இருக்கிறார்.

இதற்கு முன்பு, அதாவது 24 வருடங்களுக்கு முன்னர் சபாவில் பெண் துணை முதல்வராக சபா பெர்சத்து கட்சியைச் சேர்ந்த டத்தோ அரியா துங்கு அகமட் என்பவர் நியமிக்கபாட்டார். அவர் 1994ஆம் ஆண்டில் அப்பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

சபா பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் தலைவராக இருந்து வரும் கிறிஸ்டினா லியூ, மாநில சுற்றுலா, கலாசார மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

மாநில சுற்றுலா துறையை மேம்படுத்துவதோடு சபா வனவிலங்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்தப் போவதாக அவர் சொன்னார். தமக்கு வழங்கப்பட்ட பதவி குறித்து தாம் மிதமான சந்தோஷம் கொள்ளும் அதேவேளையில், புது உற்சாகத்துடன் இருப்பதாக கிறிஸ்டினா லியூ தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker