Latestமலேசியா

சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் ஹரிராயாவுக்குபின் நியமனம்!

ஷா ஆலாம்,மே.25- புதிய சிலாங்கூர் மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின்னர் நியமிக்கப்படுவார் என தற்போதைய சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

அந்தப் பதவிக்கு யார் பொருத்தமான வேட்பாளர் என்பதை பக்காத்தான் ஹராப்பான் அடுத்த வாரம் கலந்தாலோசித்த பின்னர், வேட்பாளர் பட்டியல் மன்னரிடம் கொடுக்கப்படும்.

புதிய சிலாங்கூர் மந்திரி புசார் நியமிக்கப்பட்ட பின்னர் தாம் பொருளாதார அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அனுமதி வழங்கினார் என அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், முறையான அதிகார மாற்றம் நிகழும் வரை அஸ்மின் அலி தற்போதைய சிலாங்கூர் மந்திரி புசார் பதவியில் நீடிப்பார்.

இதற்கிடையில், லாங்காட் 2 நீர் சுத்திகரிப்பு திட்டத்தைப் பற்றி வினவிய போது, அமைச்சரவையில் இதைப் பற்றி விவாதிக்க தனது அமைச்சு தகுந்த ஆவணங்களை வழங்கும் என அஸ்மின் அலி கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker