Latestமலேசியா

சிலாங்கூர் செயலகம் முன் “பீர் பெட்டி” கலாட்டா! -ஜமால் மீது குற்றச்சாட்டு!

அம்பாங்,மே. 25- கடந்த வருடம் பொது மக்களுக்கு தொல்லைத் தரும் வகையில் மது பான பாட்டில்களை உடைத்ததற்காக அம்பாங் புத்ரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுங்கை புசார் பகுதி அம்னோ தலைவர் ஜமால் யுனோஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஜமால் யுனோஸுக்கு எதிரான குற்றச்சாட்டை வாசிக்க நீதிபதி இராஜா நோர்டில்லா இராஜா மாஹ்யால்டின் உடன் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரும் விசாரணை அதிகாரியும் இன்று காலை 10.45 மணி அளவில் மருத்துவமனை வந்தடைந்தனர்.

அப்போது நிருபர்களும் புகைப்படக்காரர்களும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. அதோடு, ஜமால் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டின் வாசலில் பாதுகாவலர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி, சிலாங்கூர் செயலகக் கட்டடநுழைவாயில் முன்  காலை மணி 10.15 அளவில் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மது பாட்டில்களை இரும்பு சுத்தியல் கொண்டு உடைத்ததற்காக ஜமால் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 290 -இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஜாமலுக்கு ரிமா.4,000 ரிங்கிட் ஜாமீன்டனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஜமால் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார் என அவரது வழக்கறிஞர் மெகாட் மகாதீர் கூறினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker