Latestமலேசியா

ரிம. 2 மில்லியன் மோசடி; குற்றச்சாட்டை மறுத்தார் ‘டத்தோஶ்ரீ’

கோலாலம்பூர், மே.25- நிதி சேவைகள் நிறுவனம் ஒன்றின் இயக்குநரான டத்தோஶ்ரீ எஸ்.சுப்ரமணியம் என்பவர் ரிம.2 மில்லியனை மோசடி செய்ததாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று செலாயாங் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஷஃபீரா முகமட் சாயிட்டிடம் சுப்ரமணியம் தெரிவித்தார்.

‘போர்ஃதூன் சீனா’ (Fortune China Limited) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ரிம.2,472,888 தொகையை, மல்டி-கரென்சீஸ் என்ற நிறுவனத்தின் கீழ் இடம் பெற்றுள்ள தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு சுப்ரமணியம் பரிமாற்றம் செய்துக் கொண்டார் என்று ‘போர்ஃதூன் சீனா’ நிறுவனம் அவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

அவர் அக்குற்றத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்டு மாதம் 22-ஆம் தேதி வரை புரிந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவரின் அக்குற்றம் நிரூபணமானால், குற்றவியல் சட்டத்தின் 403-ஆவது பிரிவின் கீழ், அவருக்கு 6 மாததிலிருந்து 5 ஆண்டுச் சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிம.150,000 தொகையில் ஒருவரின் உத்தரவாததின் பேரிலும், சுப்ரமணியம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு ஜூன் மாதம் 25-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

 

 

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker