Latestஉலகம்

‘ஏவுகணையா, கவலைப்படாதே சகோதரா!’ -பாசப் பிணைப்பில் கொரியத் தலைவர்கள்

சியோல், மே.27- வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன்னும் – தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் திடீரென சந்தித்துக் கொண்டதாக செய்திகளும் அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இரண்டு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப்பகுதியில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஜூன் 12 ஆம் தேதி அன்று பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய செய்தி வெளியான சில மணி நேரங்களில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கடந்த மாதம் சந்தித்தப்போது செய்து கொண்ட அணுவாயுதங்கள் ஒழிப்பு ஒப்பந்தம் குறித்தும் அவர்கள் பேசிக் கொண்டதாக கூறப்பட்டது.

வடகொரியாவில் அமைந்துள்ள பன்மூன்ஜோம் என்ற எல்லைக் கிராமத்தில் அவர்கள் இருவரும் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி வெளியானது. இருநாட்டுத் தலைவர்களும் ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி நிற்கும் புகைப்படங்களையும் வெளியாயின.

முடிந்தால் ஏற்கனவே செய்த ஜூன் 12 ஆம்தேதியன்றே சிங்கப்பூரில் சந்திப்பது குறித்து வட கொரியாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருப்பதாக தமது டுவிட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker