Latestமலேசியா

கே.எல்.-சிங்கை அதிவேக ரயில் திட்டம் கைவிடப்படுமா?

கோலாலம்பூர், மே. 27- கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான அதிவேக ரயில் திட்டத்தை கைவிட வேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்காக சிங்கப்பூருக்குச் செலுத்த வேண்டிய இழப்பீட்டை எந்த அளவுக்கு குறைக்க முடியும் என்பது குறித்து மலேசிய அரசாங்கம் கண்டறியவிருக்கிறது என்று பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

இந்தத் திட்டத்தை மலேசிய கைவிட்டால் மலேசியாவுக்கு செலவு மிகக் கூடுதலாக அமையும் என்ற அளவில், அதிவேக ரயில்திட்டத்தின் விதிமுறைகள் அமைந்திருக்கின்றன. ரயில் திட்ட உடன்பட்டை நாம் மீறினால், மிகப் பெரிய தொகையை இழப்பீடாக நாம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் சொன்னார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பினால் 2016ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாட்டின் கீழ், கோலாம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 350 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிவேக ரயில் அமைக்கப்படுகிறது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதிவேக ரயில் திட்டம் உள்பட பல மெகா திட்டங்கள் குறித்து பரிசீலிப்போம் என்று துன் மகாதீர் தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் கடன் அபரிமிதமாக இருப்பதால் அதனை குறைப்பதற்கான வழிகள் ஆராயப்படும் என்று அவர் சொன்னார். கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் 5,500 கோடி ரிங்கிட்டில் உருவாக்க உடன்பாடு காணப்பட்டுள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker