Latestமலேசியா

அம்னோவின் தலைவராக துங்கு ரசாலியா?

மாக் சில்லி,மே.28 – முன்னாள் நிதி அமைச்சர் துங்கு ரசாலி ஹம்சாவை அம்னோவின் புதிய தலைவராக நியமிக்குமாறு மாக் சில்லி அம்னோ பிரிவு முன்மொழிந்தது. இது தனது கிளை உறுப்பினர்களின் ஒருமித்த கருத்து என திரெங்கானு கெமாமானின் கிளைத் தலைவர் மைடின் ஹசான் கூறினார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட அம்னோவை புதுப்பிப்பதற்கு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. தேசிய முன்னணியின் முதுகெலும்பான அம்னோவை வழி நடத்த துங்கு ரசாலியைத் தவிர வேறு யாராலும் இயலாது என அவர் குறிப்பிட்டார்.

“துங்கு ரசாலியின் ஆற்றலையும் குணாம்சத்தையும் கருத்தில் கொண்டு அவரால் தேசிய முன்னணியின் வலிமை மற்றும் கண்ணியத்தை மீட்க முடியும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் ,” என்று அவர்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கெமாமானின் அம்னோ ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker