Latestஉலகம்

சாதனை படைத்த ‘நிலா மனிதன்’ அலன் பீன் மரணம்!

நியூயார்க், மே.28-நிலாவில் கால் பதித்து நடந்து சாதனை படைத்த 12 விண்வெளி வீரர்களில் ஒருவரான அலன் பீன், தமது 86 ஆவது வயதில் காலமானார்.

அப்போல்லோ விண்கலத்தில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங், முதன் முறையாக நிலாவில் கால்பதித்துத் திரும்பினார். அதன் பின்னர் 4 மாதங்கள் கழித்து 4 பேர் கொண்ட குழுவுடன் ஆலன் பீன், சென்ற போது நிலாவில் இறங்கி நடந்தார்.

இச்சம்பவம், 1969 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி வரலாற்றில் இடம் பிடித்தது. நிலாவில் கால் பதித்த 12 விண்வெளி வீரர்களில் அலன் பீன் 4 ஆவது இடம் பிடித்தவர்.

ஆலன் பீன் நிலாவில் கால் பதித்து அங்கு 31 மணி நேரம் நடமாடியதால் அவர் பெரும் புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து நாசாவின் விண் ஆய்வு நிலையமான ஸ்கைலாப் பயணத்திலும் அலன் பீன் இடம் பெற்றார் என்பது மறக்கவியலாது. இவர் இரு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டவர்.

கடந்த சில மாதங்களாக அலன் பீன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவின் ஹூஸ்டன் மருத்துவமனையில் கடந்த 2 வார காலமாக சிகிச்சைப் பெற்று வந்தார். எனினும் சிகிச்சைக்குப் பலனின்றி அலன் பீன் நேற்று காலமானார். அவரது மரணச் செய்தியை நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker