Latestசினிமா

‘மீண்டும் ஜேம்ஸ்பாண்ட்’- டேனியல் கிரேக் ஒப்புதல்!

லாஸ் ஏஞ்சலிஸ், மே.28- மீண்டும் “ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிப்பதை விட என் கையை அறுத்துக் கொள்வதே மேல் என்று பிட்டிவாதமாக முழங்கி வந்த நடிகர் டேனியல் கிரேக் தற்போது ஒரு வழியாக ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக டேனியல் கிரேக் கடந்த 2015 இல் அறிவித்திருந்தார். அவர் மீண்டும் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது, அவரது உலகளாவிய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் டேனியல் கிரேக் ஐந்தாவது முறையாக ஜேம்ஸ்பாண்ட்டாக ஒப்புக் கொண்டுள்ளார். புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்க டேனியல் கிரேக் 50 மில்லியன் பவுண்டு சம்பளம் பெறவுள்ளர். 2 மணி நேரம் 20 நிமிட இந்த படத்தைக் கவனத்தில் கொள்ளும் போது ஒரு நிமிடத்திற்கு டேனியல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்று ஒரு குத்து மதிப்பாக அனுமானித்துக் கொள்ளலாம்.

அது மட்டுமின்றி படத்தின் இலாபத்திலும் அவருக்கு பங்கு உள்ளதாம். வரும் டிசம்பர் மாதம் தொடர்ந்து 5 மாதங்களுக்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

உலகெங்கும் சினிமா ரசிகர்களுக்கு இங்கிலாந்து உளவாளி ஜேம்ஸ்பாண்டுக்கென தனிப்பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு. அந்த வகையில் இது 25 ஆவது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமா க இது அமையவிருக்கிறது. இத்திரைப்படம் 2019 ஆண்டு நவம்பர் 9 இல் வெளியீடு காணும் என்று இயான் புரொடாக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker